Site icon Tamil News

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை தொடர்பில் வெளியான தகவல்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேவையில் ஈடுபடவுள்ள செரியாபாணி(Cheriyapani) கப்பல், நேற்றும் இன்றும் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

25 கோடி இந்திய ரூபா செலவில் கொச்சினில் தயாரிக்கப்பட்ட செரியாபாணி கப்பல் மணித்தியாலத்திற்கு 36 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடியது.

14 ஊழியர்கள் மற்றும் 150 பயணிகளுடன் பயணிக்கும் வசதிகளை கொண்ட குறித்த கப்பலில், பயணிகளுக்கு தேவையான சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்கள் போன்றவற்றை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த சேவைக்காக தயாரிக்கப்பட்ட செரியாபாணி கப்பல் நேற்று முன்தினம் நாகை துறைமுகத்தை வந்தடைந்ததுடன், கப்பலுக்கு சிறப்பு வரவேற்பும் அளிக்கப்பட்டுள்ளது.

நாகை – இலங்கை கப்பலில் பயணம் மேற்கொள்வதற்கு ஒருவருக்கு ஒருவழி கட்டணமாக 27,000 ரூபாவும் இருவழி கட்டணமாக 53,500 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

Exit mobile version