Tamil News

நடிகையுடன் ஜாலி ட்ரிப் போன சமந்தாவின் முன்னாள் கணவர்… வசமாக சிக்கிய போட்டோ

சமந்தா, நாக சைத்தன்யா இருவரும் பிரிந்து சில வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இவர்கள் இன்னும் சர்ச்சை வளையத்திற்குள் தான் இருக்கின்றனர்.

அதில் நாக சைத்தன்யா பிரபல நடிகை உடன் டேட்டிங் செய்வதாக ஏற்கனவே செய்திகள் வந்தது. ஆனால் இருவரும் மௌனம் சாதித்த நிலையில் தற்போது ஒரு போட்டோ அவர்களின் உறவை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.

அதன்படி சமந்தாவின் முன்னாள் கணவர் பொன்னியின் செல்வன் நடிகை சோபிதாவை காதலிப்பதாக ஒரு தகவல் இருக்கிறது. ஆனால் இந்த விவகாரம் கமுக்கமாக இருக்கிறது.

இந்நிலையில் இந்த ஜோடி தற்போது வசமாக சிக்கி உள்ளனர். அதன்படி நாக சைத்தன்யா ஜீப்பில் இருக்கும் தன்னுடைய சுற்றுலாத்தள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதற்கு சோபிதா முதல் ஆளாக லைக் போட்டுள்ளார். அதை தொடர்ந்து அவரும் ஜீப்பில் செல்லும் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். இந்த இரண்டு போட்டோக்களின் பின்னணி காட்சியும் ஒன்று போல் இருக்கிறது.

இதை வைத்து இவர்கள் டேட்டிங் சென்றுள்ளதை ரசிகர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் வசமா மாட்டிகிட்ட பங்கு என இந்த ஜோடியை கலாய்த்தும் வருகின்றனர்.

Exit mobile version