Tamil News

“பூர்ணா வயிற்றில் குழந்தையாக பிறக்க விரும்புகிறேன்” சொன்னது யார் தெரியுமா?

சவரக்கத்தியை இயக்கிய மிஷ்கினின் தம்பி ஆதித்யா டெவில் படத்தை இயக்கியுள்ளார். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், மிஷ்கின் உள்பட பலர் இதில் நடித்துள்ளனர். ஹெச் பிக்சர்ஸ் ஹரி, டச் ஸ்கிரீன் ஞானசேகர் இணைந்து டெவிலை தயாரித்துள்ளனர். முதல்முறையாக மிஷ்கின் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

பிப்ரவரி 2ஆம் தேதி இந்த படம் திரைக்கு வரும் நிலையில், படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய மிஷ்கின், “சில செய்திகளில் நான் என் தம்பியை தூக்கிப் பிடிப்பதாக எழுதி இருந்தார்கள். அந்தச் செய்தியைப் படித்து நான் வெட்கப்பட்டேன். உதவி இயக்குநாகச் சேர வேண்டும் என்று கேட்ட என் தம்பியைப் பார்த்து செருப்பைத் தூக்கி எறிந்தவன் நான். பார்த்திபன் சாரிடம் பணியாற்றிவிட்டு வந்த பின்னர் தான் நான் அவனை உதவி இயக்குநாகச் சேர்த்துக் கொண்டேன்.

நடிக்கும் போது சுயத்தை இழப்பவர்கள் தான் சிறந்த நடிகர், நடிகைகள் என்பேன். பூர்ணா அந்த மாதிரியான நடிகை.

பூர்ணா என் வாழ்க்கையில் மிக முக்கியமான பெண். அவள் வயிற்றில் நான் குழந்தையாகப் பிறக்க விரும்புகிறேன். என்னை ஒரு தாய் போல் அவள் பார்த்துக் கொள்வாள். என் குழந்தையை விட அவள் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

அவள் சாகும் வரைக்கும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். மற்ற படங்களில் அவள் நடிப்பாளா என்று தெரியாது. என் படங்களில் எப்போதும் பூர்ணா இருப்பாள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இசையில் நூறு மார்க் வாங்குபவர்கள் எப்பொழுதும் இளையராஜாவும், ஏ.ஆர்.ரகுமானும் தான். நான் இளையராஜா ஐயாவிடம் இருந்து சண்டை போட்டு வந்த பின்னர் 6 ஆண்டுகளாக இசையைக் கற்று வருகிறேன்.

இப்படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று கேட்டதும் ஏற்றுக் கொண்டு இசையமைத்து இருக்கிறேன். என் இசைக்கு 35 மதிப்பெண் கொடுக்கலாம் என்று நம்புகிறேன்” என்றார்.

Exit mobile version