Site icon Tamil News

வித்தியாசமான முறையில் அவுட் ஆன முஷ்பிகுர் ரஹீம்

நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் இன்று தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய வங்காளதேசம் அணி 66.2 ஓவரில் 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹீம் 35 ரன்கள் எடுத்தார்.

இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த முஷ்பிகுர் ரஹீம் தேவையில்லாமல் அவுட் ஆனார்.

அவர் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜேமிசன் பந்து வீச்சை எதிர் கொண்டார். அப்போது தடுப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ரஹீம், பேட்டில் பட்டு பந்து அவரை விட்டு தள்ளி சென்றது. உடனே அந்த பந்தை கையால் தள்ளி விட்டார்.

இதை பார்த்த நியூசிலாந்து வீரர்கள் அவுட் என அப்பீல் செய்தனர். உடனே நடுவர்கள் 3-ம் நடுவரிடம் முறையீட்டார். இதனையடுத்து 3-ம் நடுவர் அவுட் என அறிவித்தார்.

இதன் மூலம் obstructing the field முறையில் அவுட் ஆன முதல் வங்காளதேசம் வீரர் என்ற மோசமாக சாதனை படைத்தார்.

Exit mobile version