Site icon Tamil News

முகப் பருக்கள் போன்று வரும் mpox தொற்று : மக்களே அவதானம்!

mpox நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபர், சீழ் நிரம்பிய முகப்பரு மற்றும் ஒரு பயங்கரமான டான்சில் தொற்றுக்கு ஆளானதை வெளிப்படுத்தியுள்ளார்.

விக்டர் என்ற நபர் ஒருவர் ஆரம்பத்தில் சிறிய பருபோன்ற அமைப்பில் புண்கள் வெளிப்பட்டதாகவும், அவற்றை கைகளினால் நீக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் சில நாட்களில் ஏராளமான கொப்புளங்கள் தோன்றியதாகவும், அவற்றில் இருந்து சீழ் வடிந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

பின்னர் வைத்தியசாலைக்கு சென்ற அவர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளார். இருப்பினும் இரண்டு வாரங்கள் கழித்தே அவருக்கு mpox  நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்த அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை விக்டர் முகப்பருக்கள் வருவதற்கு முன்பு தான் ஒரு பெண்ணை முத்தமிட்டதாகவும், அதன் மூலமாக இவ் தொற்று பரவியிருக்கலாம் என்றும் சந்தேகிப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆகவே முகப்பருக்கள் வந்தால் அவற்றை என்னவென்று அறியாமல் கிள்ள வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Exit mobile version