Site icon Tamil News

சிங்கப்பூரில் அதிரடி மாற்றத்திற்கு தயாராகும் வாகன சாரதிகள்

சிங்கப்பூரில் அதிகமான வாகன உரிமையாளர்கள் மின்வாகனங்களுக்கு மாறிவரும் போக்கினை அவதானிக்க முடிந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி சுமார் 11,000 மின்வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. கடந்த ஆண்டைவிட அந்த எண்ணிக்கை 40 சதவீதம் அதிகமாகும்.

ஆனால் வீதிகளில் செல்லும் ஏனைய வாகனங்களுடன் ஒப்பிடுகையில் மின்வாகனங்களின் விகிதம் குறைவாகவே உள்ளது.

சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான வாகனமோட்டிகளுக்கு மின்வாகனம் குறித்து அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை என்பது கருத்தாய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

வாகனம் வாங்க வரும் 250 பேரில் 22 விழுக்காட்டினர் மட்டுமே மின் வாகனங்களைப் பற்றிய விவரங்களை ஆராய்கின்றனர். Cycle & Carriage Singapore கார் நிறுவனம் நடத்திய அண்மை ஆய்வு ஒன்றில் அது தெரியவந்தது.

Exit mobile version