Site icon Tamil News

அகதிகளை ஆஸ்திரேலியாவிற்கு அழைத்து வந்த தாய் மற்றும் மகளுக்கு கிடைத்த தண்டனை

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக ஆஸ்திரேலியாவிற்கு அகதிகளை அழைத்து வந்ததாக தாய் மற்றும் மகள் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ள 54 மற்றும் 32 வயதுடைய இந்த இரண்டு பெண்களுக்கும் படகு மூலம் அகதிகளை அழைத்து வந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் மேற்கு ஈஸ்திரேலியாவின் கிம்பர்லி கடற்கரைக்கு சுமார் 15 பேர் படகு மூலம் வந்தமை தொடர்பில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றது.

இந்த அகதிகள் குழுவை எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர், இந்த சம்பவத்துடன், எல்லை பாதுகாப்பு குறித்த கூட்டாட்சி எதிர்க்கட்சிகளும் அரசாங்கம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட தாயும் மகளும் தற்காலிக விசாவில் ஆஸ்திரேலியாவில் வசித்து வருவதாகவும், அவர்களின் குற்ற வரலாறு குறித்து எந்த தகவலும் இல்லை எனவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு சந்தேக நபர்களும் வெளிநாட்டு பயண தடை உட்பட பல நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய அதிகாரிகள் படகில் வரும் குடிமக்கள் அல்லாதவர்களை சட்டவிரோத குடியேற்றவாசிகள் என்று அழைக்கின்றனர், கடந்த சில மாதங்களில் மட்டும் இவ்வாறு கைது செய்யப்பட்ட சுமார் 95 பேர் நவுரு தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version