Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் ஒரே வருடத்தில் 56,000க்கும் அதிகமானோரை காணவில்லை

கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் ஆஸ்திரேலியாவில் 56,000க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு குயின்ஸ்லாந்தில் மட்டும் 9,000க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காணாமல் போனவர்களின் பின்னணியில் மனநலம், அதிர்ச்சி அல்லது தற்கொலை ஆகியவையும் இருப்பதாக காணாமல் போனோர் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் சாரா வெய்லண்ட் கூறுகிறார்.

கடந்த சில வருடங்களாக, இனந்தெரியாத மனித எச்சங்களைப் பயன்படுத்தி காணாமல் போன 19 பேர் தொடர்பில் புதிய தடயவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மத்திய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பரிசோதிக்கப்பட்ட சில எலும்புகள் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் வருடாந்தம் 55,000க்கும் அதிகமானோர் காணாமல் போவதாக பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் காணாமல் போனவர்கள் விரைவாக கண்டுபிடிக்கப்பட்டாலும், அது எப்போதும் வெற்றியடைவதில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

அவுஸ்திரேலிய மாநகரப் பகுதியில் நீண்டகாலமாக காணாமல் போனவர்கள் 14 பேர் உள்ளதாகவும், இதில் வெளிநாட்டில் காணாமல் போன இருவர் உள்ளடங்குவதாகவும் கூறப்படுகிறது.

காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து பொதுமக்களின் உதவியுடன் அவர்களது அன்புக்குரியவர்களுடன் மீண்டும் இணைத்துவிடுவோம் என நம்புவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Exit mobile version