Site icon Tamil News

ஜப்பானில் கானுன் புயல் : 500க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து

ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் கானுன் என்ற புதிய புயல் உருவானது. இந்த புயல் கடல் வழியாக நகர்ந்து ஒகினாவா மற்றும் அமாமி பகுதியில் கரையை கடந்தது.

அப்போது 198 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. எனவே கனமழை பெய்யும் அபாயம் உள்ளதால் அங்கு தாழ்வான இடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் கானுன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன் தினம் 264 விமானங்கள் ரத்து செய்யப்பட்டநிலையில் நேற்று 500க்கும் அதிகமான உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகினர்.

தற்போது, சூறாவளி கானுன் “மிகவும் வலுவான” நிலையில் உள்ளது. அதன் மையப்பகுதியின் அழுத்தம் 935 ஹெக்டோபாஸ்கல்களை எட்டுகிறது, மேலும் காற்றின் வேகம் வினாடிக்கு 150 அடி, வினாடிக்கு 210 அடி வேகத்தில் வீசுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version