Tamil News

அதிகளவில் அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள்; போர் நிறுத்ததிற்கு இஸ்ரேலை வலியுறுத்தும் பிரான்ஸ்

அதிக அளவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதால் உடனடியாக காசா பகுதியில் நீண்ட கால போர் நிறுத்தத்தை கொண்டுவர வேண்டுமென பிரான்ஸ் நாடு வலியுறுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் கேத்தரின் கொலோனா காசாவில் தொடர்ந்து வரும் தாக்குதல் குறித்த கவலையை இஸ்ரேலிடம் தெரிவித்தார். மேலும், ராஃபாவில் குடியிருப்புக் கட்டிடம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கான காரணத்தை கேட்டறிந்தார். இஸ்ரேலின் ராஃபா தாக்குதலில் பிரான்சு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஊழியர் ஒருவர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும், இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் காசாவில் அதிக அளவில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதாக பிரான்ஸ் அரசு வருத்தம் தெரிவித்துள்ளது.

Between 350,000 to 400,000 people still in northern Gaza, says US special  envoy

எனவே இஸ்ரேல் அதிகாரிகள் இந்த தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேத்தரின் கொலோனா தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தாக்குதலால் இதுவரை காசாவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 18,800க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், சர்வதேச நாடுகள் இஸ்ரேலின் இந்த நடவடிக்கையைக் கண்டித்துவருகின்றன.

இஸ்ரேல் உலக நாடுகளின் ஆதரவை இழக்க ஆரம்பித்திருப்பதாக அமெரிக்கா கடந்த வாரம் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் தெல் அவிவில் இஸ்ரேல் அதிகாரிகளைச் சந்தித்து போர் காலத்தை வரையறுக்க வலியுறுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

Exit mobile version