Site icon Tamil News

பிலிப்பீன்சில் குரங்கம்மை: கிளேட் 2 கிருமிவகையால் ஒருவர் பாதிப்பு

பிலிப்பீன்சில் நபர் ஒருவருக்குக் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.

அவர் கிளேட் 2 கிருமிவகையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் தியோடோரோ ஹேர்போசா ஆகஸ்ட் 21ஆம் திகதியன்று தெரிவித்தார்.

அது ஆப்பிரிக்காவில் மிக விரைவாகப் பரவி வரும் மிகக் கடுமையான கிளேட் 1 கிருமிவகை அல்ல என்று தெரிவிக்கப்பட்டது.இதுவே பிலிப்பீன்சில் இவ்வாண்டு ஏற்பட்டுள்ள முதல் குரங்கம்மை பாதிப்பு.

நோய்வாய்ப்பட்ட 33 வயது பிலிப்பீன்ஸ் நபர் வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வருவதாகத் ஹேர்போசா கூறினார்.

ஜூலை 2022ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பிலிப்பின்சில் 10 பேருக்குக் குரங்கம்மை ஏற்பட்டுள்ளது.அவர்கள் அனைவரும் குணமடைந்துவிட்டதாக அமைச்சர் ஹேர்போசா தெரிவித்தார்.

குரங்கம்மை பொதுவாக இலேசான பாதிப்புகளை விளைவிக்கக்கூடியது.

ஆனால் சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவானவர்கள் ஆகியோரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியது.

Exit mobile version