Site icon Tamil News

ஜெர்மனி மக்களுக்கு கிடைக்கவுள்ள நிதி தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜெர்மனியில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக நிதியமைச்சர் வழங்குவதாக அறிவித்து இருந்த நிதியில் மாற்றம் ஏற்றம் ஏற்பட்டுள்ளது.

ஜெர்மனியின் நிதி அமைச்சர் க்ளிமா கில்ட் என்று சொல்லப்படுகின்ற சுற்றுப்புற சூழலை பாதுகாப்பதற்காக அரசாங்கத்தால் பெற்றுக்கொண்ட வரியில் இருந்து சில பகுதிகளை சாதாரண பொது மக்களுக்கு வழங்குவதாக கடந்த நாட்களில் தெரிவித்து இருந்தார்

இந்நிலையில் நிதி அரமச்சருக்கு குறித்த பணத்தை பொது மக்களுக்கு வழங்குவது தொடர்பில் கால அவகாசம் எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதாவது இந்த ஆண்டு ஆரம்பத்தில் க்ளிமா கில்ட் என்று சொல்லப்படுகின்ற இந்த பணமானது தலா நபருக்கு 130 யுரோ வழங்கப்படும் என்று ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் ஜெர்மனியுடைய உச்ச நீதிமன்றமானது ஜெர்மன் அரசாங்கம் 60 பில்லியன் யூரோக்களை மேலதிக துண்டு தொகையாக பெற்றுக் கொண்டதாக தெரிவித்து இருந்தது.

அதனால் இது ஜெர்மனியின் அடிப்படை சட்டத்துக்கு பிரயோகமானது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு பல சமூக கொடுப்பனவுகள் தொடர்பில் கட்டுப்பாடுகளை நிதி அமைச்சர் மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இதன் காரணத்தினால் இவ்வகையாக க்ளிமா கில்ட் என்று சொல்ப்படுகின்ற கரியமல வாயுவுக்காக பெறப்பட்ட பணத்தில் இருந்து வழங்கப்பட உத்சேித்து உள்ள பணமானது 2025 ஆம் ஆண்டுக்கு பிறகு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Exit mobile version