Site icon Tamil News

காலநிலை மாற்றம் காரணமாக மில்லியன் கணக்கான குழந்தைகள் இடப்பெயர்வு!

காலநிலை மாற்றம் காரணமாக கடந்த 2016 முதல் 2021 ஆம் ஆண்டுவரை ஏறக்குறைய 43.1 மில்லியன் குழந்தைகள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளது.

ஆனால் அவ்வாறாக இடம்பெயர்ந்தவர்கள் மீது கவனம் செலுத்தப்படவில்லை என்றும் குறைக்கூறியுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள விரிவான  அறிக்கையில், ஐக்கிய நாடுகளின் நிறுவனம் பாதிக்கப்பட்ட சில குழந்தைகளின் இதயத்தை உலுக்கும் கதைகளை விவரித்துள்ளது.

காலநிலை பேரழிவுகளால் ஏற்படும் உள் இடப்பெயர்வுகள் பற்றிய புள்ளிவிவரங்கள் பொதுவாக பாதிக்கப்பட்டவர்களின் வயதைக் கணக்கிடுவதில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால் யுனிசெப் நிறுவனமானது, அரசு சாரா உள் இடப்பெயர்வு கண்காணிப்பு மையத்துடன் இணைந்து தரவுகளைத் தேர்வுசெய்து குழந்தைகளின் மறைக்கப்பட்ட எண்ணிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.

Exit mobile version