Tamil News

கனடாவில் சமூக ஊடகங்களில் செய்திகளை தடை செய்ய META முடிவு

உலகின் மிகவும் பிரபலமான சமூக வலைதளமான பேஸ்புக்கை நடத்தி வரும் மெட்டா நிறுவனம், “கனடாவில் உள்ள அனைத்து பயனர்களும் இனி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்திகளைப் பெற மாட்டார்கள்” என்று கூறியுள்ளது.

டிஜிட்டல் செய்திகளின் எழுச்சிக்குப் பின்னர், கடந்த பத்து ஆண்டுகளில் கனடாவில் நூற்றுக்கணக்கான செய்தி நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன; பலர் வேலை இழந்துள்ளனர். போராடி வரும் கனேடிய பத்திரிகைகளுக்கு ஆதரவளிக்க கனடா அரசு முடிவு செய்து ஒரு மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

இதன்படி, கனடா டிஜிட்டல் துறையின் ஜாம்பவான்கள் தங்களது உள்ளடக்கத்திற்காக கனடா நாட்டிற்கு பணம் செலுத்த வேண்டும். இந்த ஜாம்பவான்கள் தங்கள் தளங்களில் பகிரப்படும் செய்திகள் மற்றும் தகவல்களுக்காக கனடா நாட்டு “அவுட்லெட்”களுடன் நியாயமான வணிக ஒப்பந்தங்களைச் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்டா நிறுவனம் அந்த செய்திகளை தடை செய்யும் முடிவை எடுத்துள்ளது. கூகுள் நிறுவனம் இதே போன்ற முடிவை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

Exit mobile version