Site icon Tamil News

WhatsAppஇல் அடுத்தடுத்து சிறப்பான அப்டேட்களை வெளியிட தயாராகும் மெட்டா

வாட்ஸ்அப்பில் அடுத்தடுத்து சிறப்பான அப்டேட்களை மெட்டா நிறுவனம் கொண்டவர தயாராக உள்ளது.

வாட்ஸ்அப் செயலியை உலகில் கோடிக்கணக்கான பேர் உபயோகித்து வருகின்றனர். அதனைப் பயன்படுத்தும் பயனர்கள் நாளுக்கு நாள் புதிதாக அப்டேட்களை மெட்டா நிறுவனம் வழங்குவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். அதன்படி, தற்போது புதிதாகப் பல அப்டேட்களை விரைவில் அறிமுக செய்யவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

வாட்ஸ்அப் பயனர்கள் வெகு நாட்களாகக் கேட்கும் ஒரு அப்டேட் தான் இந்த ‘யூசர் நேம்’. இந்த ‘யூசர் நேம்’ என்பது வேறொன்றும் இல்லை, டெலிகிராம், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகத்தளத்தில் பயனர்களுக்கென ஒரு யூசர் நேம் இருக்கும் அது தான் இதுவும். அதாவது, தற்போது இருக்கும் வாட்ஸ்ஆப்பில் போன் நம்பர் இருந்தால் மட்டுமே மற்றொருவருடன் பேசமுடியும்.

ஆனால், இந்த அப்டேட் அறிமுகமானால் போன் நம்பர் தேவை இல்லை. அதற்குப் பதிலாக இந்த ‘யூசர் நேம்’ மட்டுமே போதுமானது. இதனை வைத்து யாரென்று தெரியாதவரிடம் கூட நம்மால் பேச முடியும். இது நம் சுய தரவுகளைப் பாதுகாக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையாகும். குறிப்பாக எந்த ஒரு மோசடியிலும் நாம் சிக்காமல் இந்த யூசர் நேம் நம்மை பாதுகாக்கும்.

மேலும், பெண்களுக்கு இது மிக உதவியியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தற்போது ​​இந்த அப்டேட், பரிசோதனையில் இருப்பதாகவும், விரைவில் பீட்டா பயனர்களுக்குக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு இறுதியில் இந்த அப்டேட் அனைத்து பயனர்களுக்கும் அறிமுகமாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ்அப் பயனர்களைக் கவரும் அப்டேட் தான் இந்த “லைக் & ஷேர்”. இதன் பெயரிலே அது என்ன அப்டேட் என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. அது வேறொன்றும் இல்லை நாம் நமது நண்பர்கள், உறவினர்கள் வைக்கும் ஸ்டேடஸை நம்மால் இதுவரை பார்க்க மட்டுமே முடியும். ஆனால், நல்ல ஒரு ஸ்டேட்டஸ் இருந்தால் அதற்கு லைக் மற்றும் ஷேரிங் செய்ய முடியாது.

ஆனால், இந்த அப்டேட் அறிமுகமானது என்றால் நமக்குப் பிடித்தவர்கள் ஸ்டேட்டஸுக்கு லைக்கும் செய்யலாம் அதனை ஷேரும் செய்யலாம் என்று கூறுகிறார்கள். மேலும், இந்த அப்டேட் விரைவில் ஆண்டிராய்டு பயனர்களுக்கு அறிமுகமாகுமெனவும் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version