Site icon Tamil News

ஆயிரக்கணக்கான கணக்குகளை அகற்றிய Meta

அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனமான Meta ஆயிரக்கணக்கான போலியான கணக்குகளை அகற்றியுள்ளது.

அந்தக் கணக்குகள் சீனாவிலிருந்து பரவும் தேவையற்ற மின்னஞ்சல் நடவடிக்கைகளோடு தொடர்புள்ளவை என தெரியவந்துள்ளது.

“Spamouflage” என்னும் பெயரிலான நடவடிக்கையில் ஈடுபட்ட சுமார் 9,000 போலி கணக்குகளை முடக்கியுள்ளதாக Meta நிறுவன அறிக்கை குறிப்பிட்டது.

அண்மை நடவடிக்கையின்கீழ் சீனாவைப் பெருமைப்படுத்தியும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளைச் சிறுமைப்படுத்தியும் பதிவுகள் பரப்பப்படுகின்றன.

முடக்கப்பட்ட பொய்க் கணக்குகளில் சில, சீனாவின் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்குச் சொந்தமானவை எனக் கூறப்படுகிறது.

பொய்க் கணக்குகளில் பல, சீனாவின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து ஒரு தொகுப்பாகச் செயல்படுகின்றன என்று தெரியவந்துள்ளது.

அநேகமாக அவை ஒரே அலுவலகத்திலிருந்து சில குழுவினரால் அனுப்பப்படக்கூடுமென Meta நிர்வாகிகள் கூறினர்.

அந்தப் பொய்க் கணக்குகளை இயக்குவோர் பெய்ச்சிங் நேரப்படி மதிய, இரவு உணவு இடைவேளை எடுத்துக்கொள்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version