Site icon Tamil News

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் முன்னாள் மருமகன் திடீர் மரணம்

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் முன்னாள் மருமகனும், ஸ்ரீஜாவின் முன்னாள் கணவருமான சிரிஷ் பரத்வாஜ் காலமானார். மிக இளம் வயதிலேயே ஷிரிஷ் பரத்வாஜ் இறந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிரிஷும் – ஸ்ரீஜாவும் காதலித்து வந்த நிலையில் தங்கள் பெற்றோரை எதிர்த்து 2007 இல் திருமணம் செய்து கொண்டனர். 2014ல் ஸ்ரீஜா ஷிரிஷை விவாகரத்து செய்தார். அதன் பிறகு இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார்கள்.

இந்நிலையில், ஸ்ரீஜாவின் முதல் கணவர் நுரையீரல் நோயால் இன்று காலை உயிரிழந்துவிட்டதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Exit mobile version