Site icon Tamil News

இலங்கை ஜனாதிபதி ரணிலுக்கும், பிரானஸ் ஜனாதிபதி மக்ரோனுக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கும் இடையில் இருதரப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கையின் பொருளாதாரத்தில் பசுமையான மாற்றத்திற்கான யோசனைகள் பரிமாறப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்துடன் (IORA) பிரான்சின் உறவை வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழக திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு பிரான்ஸ் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் துபாயில் நடைபெறும் 28வது ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு அல்லது COP 28 பிரதான மாநாட்டில் கலந்துகொண்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version