Tamil News

ரோஜா இதழில் கொட்டி கிடக்கும் மருத்துவ குணங்கள்.!

பூக்கள் என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது ரோஜா பூக்கள் தான். ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரும் விரும்பக்கூடிய பூ ரோஜா.

ரோஜா பூக்கள் அழகுக்கு மட்டுமில்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக இருக்கிறது. அட ஆமாங்க.. ரோஜா இதழ்களில் பல மருத்துவ குணங்கள் உள்ளது. அவற்றை பற்றித்தான் இப்பதிவில் பார்ப்போகிறோம்.

ரோஜா பூக்கள் குளிர்ச்சி தன்மை உடையவை. ரோஜா இதழ்கள் உடலில் இருக்கும் அதிகப்படியான வெப்பத்தை தனித்து சமநிலைப்படுத்துகிறது. இது தவிர சரும எரிச்சல், அசிடிட்டி போன்ற நிலைகளையும் குறைக்கிறது.

அத்துடன் ரோஜா இதழ்கள் மூலநோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, மூல நோய் உள்ளவர்கள் ரோஜா இதழ்களை தண்ணீரில் சேர்த்து காய்ச்சி குடித்து வர மூல நோய் விரைவில் குணமாகும்.

இதைத்தவிர வயிற்றுப்போக்கால் அவதிப்படுபவர்கள் ரோஜா இதழ்களை நன்றாக கழுவி 1 கைப்பிடி அளவிற்கு நன்றாக மென்று சாப்பிட்டு வர வயிற்றுப்போக்கு நீங்கிவிடும்.


பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை தொடர்பான நோய்களை போக்குவதற்கு ரோஜா இதழ்கள் மருந்தாக பயன்படுகிறது. எனவே, ரோஜா இதழ்களை பெண்கள் சாப்பிட்டு வர கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்கும். அதுமட்டுமில்லாமல் உடல் இளமையாகவும் இருக்கும்.

ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக அரைத்து கெட்டியான தயிரில் கலந்து காலை வேளையில் சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும்.

ரோஜா இதழ்கள் பல ஆண்டுகளாக செரிமான அமைப்பை மேம்படுத்த மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரோஜா இதழ்களை தண்ணீரில் சேர்த்து குடித்து வர செரிமான பிரச்சனை விரைவில் நீங்கும்.

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் ரோஜா இதழ்களை தண்ணீரில் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி அதில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து காலை 1/2 டம்ளர் மாலை 1/2 டம்ளர் என்ற அளவிற்கு குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை எளிதில் நீங்கும்.

மேலும் ரோஜா இதழ்களை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் உடல் எடை குறைகிறது என்று ஆய்வில் கூறப்படுகிறது. எனவே, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ரோஜா இதழ்களை தண்ணீரில் சேர்த்து கொதிக்கவைத்து வடிகட்டி அதில் சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டு வர உடல் எடை வேகமாக குறையும்.

(

Exit mobile version