Site icon Tamil News

“MasterChef” Australia 2024 : இலங்கை பெண்ணுக்கு கிடைத்த அங்கீகாரம்!

“MasterChef” Australia 2024 ரியாலிட்டி சமையல் போட்டியில், இலங்கையைச் சேர்ந்த சாவிந்திரி பெரேரா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

போட்டி முழுவதும் இலங்கை உணவுகளை தயாரித்தமை மிகச் சிறந்ததாக கூறப்படுகிறது.  அந்த வெற்றியின் பின்னர் சவீந்திரி பெரேரா நேற்றிரவு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இலங்கையில் பிறந்த சாவிந்திரி பெரேரா, தனது 18வது வயதில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டுக்கு குடிபெயர்ந்தார்.

தற்போது 30 வயதாகும் அவர், தொழில் ரீதியாக வங்கி ஆலோசகராக உள்ளார்.

சிறுவயது முதலே இலங்கை உணவு தயாரிப்பில் ஆர்வம் இருந்ததால் மாஸ்டர் செஃப் ஆஸ்திரேலியா போட்டியில் சாவிந்திரி கலந்து கொண்டார்.

அந்த போட்டியில், அவர் தனது தாயார் தயாரித்த சுவையான இலங்கை உணவு மற்றும் பானங்களை தயார் செய்திருந்தார்.

ஆஸ்திரேலியன் நெட்வொர்க் – 10 தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் “MasterChef” ஆஸ்திரேலியா ரியாலிட்டி சமையல் போட்டிக்காக, ஆஸ்திரேலியா முழுவதிலுமிருந்து போட்டியாளர்கள் சோதனைச் சுற்றுகளில் பங்கேற்கின்றனர்.

நடுவர் குழு அவர்கள் தயாரிக்கும் உணவின் சுவையின் அடிப்படையில் 50 பேரை அரையிறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யும்.

அரையிறுதிச் சுற்றில் 50 போட்டியாளர்களில் 24 போட்டியாளர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.

பிறகு ரியாலிட்டி டிவி ஷோவில் ஒவ்வொரு வாரமும் புதுப்புது சமையல் குறிப்புகளுடன் வருகிறார்கள்.

அவர்களில், இறுதி மூவரில் தேர்ந்தெடுக்கப்பட்ட சாவிந்திரி பெரேரா, MasterChef Australia 2024 ரியாலிட்டி சமையல் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றார்.

அந்த வெற்றிக்குப் பிறகு, நேற்று இரவு தீவு திரும்பினார். அவரை வரவேற்க அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் விமான நிலையத்திற்கு வந்தனர்.

Exit mobile version