Site icon Tamil News

ஜெர்மனியில் 49 யூரோ பயண அட்டையில் பாரிய மோசடி – பல மில்லியன் யூரோ நட்டம்

ஜெர்மனியில் 49 யூரோ பயண அட்டையில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மனியில் பல மாநிலங்களில் பல மோசடியாளர்கள் பயண அட்டையை மோசடியான முறையில் பெறுவதற்கு முயற்சித்துள்ளதாக சில அமைப்புக்கள் தெரிவித்துள்ளது.

இந்த டிக்கடை பெற முயற்சிக்கின்றவர்கள் தங்களது வங்கி கணக்கில் பணம் இல்லாத நிலையில் இவர்கள் இந்த பயண அட்டைக்கு விண்ணப்பம் செய்வதாகவும், பின்னர் போக்குவரத்து அமைப்பானது பணத்தை வங்கி கணக்கில் இருந்து பெற முயற்சிக்கும் பொழுது பணம் இல்லாமால் போவதாகவும் இதன் காரணத்தினால் போக்குவரத்து அமைப்பிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பகுதிகளில் இந்த மோசடியில் ஈடுப்பட்டதன் காரணமாக 1.4 மில்லியன் யூரோக்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மோசடிக்காரர்கள் சில வங்கி கணக்குகளை கொடுத்து இவர்கள் இந்த பயண அட்டையை பெற முயற்சிக்கின்றார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

Exit mobile version