Site icon Tamil News

ஜெர்மனியில் பல குழந்தைகள் மர்மமான முறையில் மரணம் – வெளியான காரணம்

ஜெர்மனியில் குழந்தைகள் இறந்து பிறப்பதற்கான காரணங்கள் தற்பொழுது இணங்காணப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் கடந்த காலங்களில் இறந்த நிலையில் சிசுக்கள் பிறப்பது அதிகரித்து செல்வதாக புள்ளி விபரம் ஒன்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜெர்மன் சமஷ்டி அரசாங்கத்துடைய புள்ளி விபர திணைக்களமானது 2021 ஆம் ஆண்டு மொத்தம் 3420 சிசுக்கள் இவ்வாறு இறந்த நிலையில் பிறந்ததாக தெரியவந்துள்ளது.

அதாவது கடந்த ஆண்டு உடன் ஒப்பிடும் பொழுது 7.5 சதவீதமாக உயர்வடைந்துள்ளதாகவும்,

இவ்வாறு இறந்த நிலையில் சிசுக்கள் பிறப்பதற்கு முக்கிய காரணம் தொடர்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது சிசுக்கள் இறந்த நிலையில் பிறப்பதற்கு முக்கிய காரணமாக செயற்கை கருத்தரிப்பு மற்றும் சத்திர சிகிச்சைகள் மூலம் குழந்தைகள் பெறுதல் மற்றும் கொரோனா காலங்களில் தாய்மார்கள் தொற்று நோய்க்குள்ளாகிய காரணத்தினால் சிசுக்களுக்கு போதியளவு ஒட்சிசன் கிடைக்காத போன்ற காரணத்தினால் சிசுக்கள் இறந்த நிலையில் பிறந்ததாகவும் தெரியவந்துள்ளது.

தற்போதைய சூழலில் இறந்து பிறக்கும் சிசுக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு பல நடவடிக்கைகளை மருத்துவ வட்டாரங்கள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version