Tamil News

‘கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டேன்” லோகேஷிடம் மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்

வில்லனாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மன்சூர் அலிகான். முதல் படத்திலேயே அசத்தலான வில்லனாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

தொடர்ந்து பல திரைப்படங்களிலும் வில்லனாக நடித்தார். சில படங்களில் அவர் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அசால்ட்டாக வசனம் பேசி நடிப்பது இவரின் ஸ்டைல்.

நிஜவாழ்க்கையிலும் மன்சூர் அப்படித்தான். மனதில் என்ன நினைக்கிறாரோ அதை அப்படியே பேசும் குணம் கொண்டவர்.

இதனால் பலமுறை புகார்களிலும், வழக்குகளிலும் சிக்கி சிறைக்கு போயிருக்கிறார். இதனால், இவருகு என ரசிகர் கூட்டமும் உண்டு.

அந்த ரசிகர்களில் லோகேஷ் கனகராஜும் ஒருவர். எனவே, லியோ படத்தில் ஒரு சின்ன வேடத்தில் மன்சூர் அலிகானை நடிக்க வைத்தார்.

சமீபத்தில் இப்படம் பற்றி பேசிய மன்சூர்

‘லியோ படத்துல தம்மாத்துண்டு வேஷம். அதுக்கு இவ்வளவு பில்டப்பு.. சும்மா டம்மி துப்பாக்கி, அட்டக்கத்தியை கையில் கொடுத்திட்டு. வாங்க பாலஸ்தீன போருக்கு போவோம். மக்கள் சாகுறாங்க.. அரசியல்வாதிங்க கொள்ளையடிக்கிறாங்க.. லோகேஷ் என்ன வச்சி அந்த மாதிரி ஒரு அரசியல் படம் எடுக்கலாம்’ என பேசியிருந்தார்.

இதையடுத்து விஜயுடன் நடிக்க வாய்ப்பு கொடுத்த லோகேஷை மன்சூர் இப்படி கலாய்த்துவிட்டாரே என சமூகவலைத்தளங்களில் பலரும் பொங்கினார்.

இந்நிலையில், லோகேஷ் பற்றி பேசியதற்கு மன்சூர் வருத்தம் தெரிவித்துள்ளார். தம்மாத்துண்டு என்ற சொல் என்னை மன்னிக்க முடியாதவனாக ஆக்கிவிட்டது.

350 இயக்குனர்களின் படத்தில் நடித்திருக்கிறேன். ஆனால், லோகேஷை போல் ஒரு படைப்பாளியை பார்த்தது இல்லை. இப்படம் பற்றி தவறான வசூல் கணக்கை காட்டி வெளியே சிலர் ஹைனா போல குறைக்கின்றனர். என்னுடைய சொந்த படைப்பு காரணமாக லியோவில் என்னை நினைத்தபடி உடலை வடிவமைத்து அர்ப்பணிக்க முடியவில்லை. அதற்காக வருத்தப்படுகிறேன்’ என செய்தி வெளியிட்டுள்ளார்.

Exit mobile version