Site icon Tamil News

மலேசியாவில் Live Location மூலம் மனைவிக்கு ஏற்பட்ட ஆபத்தை கண்டுபிடித்த நபர்

மலேசியாவில் கைத்தொலைபேசியின் ‘Live Location’ அம்சத்தின் மூலம் மனைவிக்கு ஏற்பட்ட ஆபத்தை அறிந்த கணவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

கணவர் ஊகித்தது போலவே மனைவி விபத்தில் மரணமடைந்ததால் அது நகரவில்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Mohd Azman Mat Yacob என்ற நபர் தமது மனைவியின் Live Location அம்சம் WhatsApp செயலியில் திடீரென்று நின்றுபோனதை அவதானித்துள்ளார்.

பலமுறை தொலைபேசியைச் சோதித்தபோதும் அது நகரவில்லை. ஏதோ விபரீதம் என்று அவருக்குப் புரிந்துபோனது. உடனடியாக மனைவியையும் அவருடன் சென்ற மகனையும் தொடர்புகொண்டார். ஆனால் பதில் இல்லை.

அவரது ஊகம் சரியானது. சற்று நேரத்தில் காவல்துறை அழைத்து அவரது மனைவியும் இரு மகன்களும் விபத்தில் மரணமடைந்த துயரச் செய்தியைத் தெரிவித்தனர். கனரக வாகனத்துடன் மோதி அவரது மனைவியின் கார் விபத்துக்குள்ளானது.

Exit mobile version