Tamil News

ராதிகா மெர்ச்சன்டின் திருமணமண ஆடை எப்படி உருவானது தெரியுமா? வைரல் வீடியோ

ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் மணப்பெண் அணிந்திருந்த ஆடையின் சிறப்புகள் பற்றித்தான் தற்போது எங்கும் பேச்சக உள்ளது.

இவர்களுடைய திருமண நிகழ்வுகள் பல நாட்களாக மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்தன.

இந்த திருமண நிகழ்வுக்கு ரூ 5000 கோடி வரை செலவிடப்பட்டதாக தெரிகிறது. அதாவது முகேஷ் அம்பானியின் சொத்தில் 0.5 சதவீதம் செலவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது.

ராதிகா, அபு ஜானி சந்தீப் கோஸ்லா டிசைன் செய்த ஆடையை தனது திருமண விழாவில் அணிந்திருந்தார். அவருடைய பனேட்டர் எனப்படும் நுணுக்கமான வேலைப்பாடுகள் அந்த ஆடையில் வெளிப்பட்டது.

மணப்பெண்கள் சிவப்பு, வெள்ளை நிறத்தில் திருமண ஆடை அணிவது பாரம்பரியமாகும். அவர் தலையில் அணிந்திருந்த 5 மீட்டர் நீளமுள்ள முக்காடு, அவர் தோளில் அணிந்திருந்த டிஷ்யூவால் ஆன துப்பட்டா, அதிலிருந்த சிவப்பு நிற வேலைப்பாடுகள் அவர் ஆடையின் அழகை மெருகேற்றியது.

அவர் உடையில் இருக்கும் சிவப்பு பார்டர்கள் ஆடையின் அழகை அள்ளிக் கொடுத்தது. ஆடையின் வேலைப்பாடுகளில் நக்ஷி, சாடி, ஜர்தோஷி உள்ளிட்டவை இருந்தன. கையால் எம்ப்ராய்டரி, ஸ்டோன் வொர்க் செய்யப்பட்ட நுணுக்கமான மலர் வடிவ டிசைன் கொண்ட செருப்பை அணிந்திருந்தார்.

இந்த ஆடை உருவான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. நீங்களும் பாருங்க…

Exit mobile version