Site icon Tamil News

T20 உலகக் கோப்பை மற்றும் IPL தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகல்

அண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி 3 போட்டிகளில் முகமது சமி விளையாடுவார் என கூறப்பட்டது.

ஆனால் காயம் குணமடையாததால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து சமி விலகினார். இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்வதற்காக சமி ஜனவரி மாதம் லண்டன் சென்றார்.

இந்நிலையில் கணுக்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்தாண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து கணுக்கால் காயம் காரணமாக இந்திய வீரர் முகமது சமி விலகியுள்ளதாக பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து முகமது சமி விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

மேலும், இந்திய வீரர் முகமது சமி ஐபிஎல் 2024 தொடரில் இருந்தும் விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version