Site icon Tamil News

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் தீவிரம் – ஆதரிக்கும் நாட்டை வெளிப்படுத்திய மஹிந்த

இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் நிலைமை தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில் பாலஸ்தீன தூதுவரை சந்தித்து இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ கலந்துரையாடியுள்ளார்.

காலை கொழும்பிலுள்ள பாலஸ்தீன தூதரகத்திற்கு சென்ற மகிந்த ராஜபக்‌ஷ, பாலஸ்தீனத்திற்கான தனது ஆதரவு தொடர்ந்தும் இருக்கும் என்பதனை வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது பயங்கரவாதத்திற்கு ஒருபோதும் இடமளிக்க கூடாது என்பதுடன், பிரச்சினைகளுக்கு போர் தீர்வாக அமையாது என்பதனையும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாலஸ்தீனம் – இஸ்ரேல் இடையிலான சமாதானத்தின் அவரசத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை பாலஸ்தீன கூட்டொருமைப் பாட்டிற்கான இலங்கை செயற்குழுவின் ஸ்தாபகத் தலைவர் என்ற ரீதியில் தொடர்ந்து பாலஸ்தீனத்திற்கான ஆதரவை தொடர்ந்தும் வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version