Tamil News

லியோவில் இணைந்த மற்றுமொரு ஹீரோயின்! வெளியான புதிய தகவல்

லியோ படத்தின் பாடல் ஷூட்டிங்கில் மடோனா செபாஸ்டியன் கலந்துகொண்டு ஆடியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

விக்ரம் படத்துக்கு பிறகு விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிவருகிறார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விஜய் – லோகேஷ் கூட்டணி இணைந்திருப்பதாலும், விக்ரம் படத்தின் மெகா ப்ளாக் பஸ்டருக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படம் என்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

அனிருத் இசையமைக்கும் இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

லியோ படத்தின் ஷூட்டிங் இரண்டு மாதங்களாக காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்தது. அங்கு விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. அதனையடுத்து சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் செட் போட்டு சில வாரங்கள் மும்முரமாக படப்பிடிப்பு நடந்தது.

அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு பையனூரில் ஷுட்டிங் நடந்தது. அந்த ஷெட்யூலை முடித்துவிட்டு இப்போது ஆதித்ய ராம் ஸ்டூடியோவில் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்துவருவதாக கூறப்படுகிறது

 

Exit mobile version