Site icon Tamil News

MacBook Pro: 16 இன்ச் டிஸ்ப்ளே – ஆப்பிளின் புதிய அறிமுகம்

ஆப்பிள் நிறுவனம் அதன் ‘ஸ்கேரி ஃபாஸ்ட்’ என்ற அறிமுக நிகழ்வை இன்று நடத்தியது. இந்த நிகழ்வில் 3 என்எம் (3nm) செயல்முறையை அடிப்படையாகக் கொண்ட புதிய எம்3 சிப்புடன் கூடிய மேக்புக் ப்ரோ மாடல்கள் மற்றும் ஐமேக்கையும் அறிமுகப்படுத்தியது. இதில் மேக்புக் ப்ரோவில் எம்3, எம்3 ப்ரோ மற்றும் எம்3 மேக்ஸ் சிப்புகளுடன் கூடிய, இரண்டு டிஸ்ப்ளே அளவு வேறுபாடுடன் கூடிய மூன்று வகைகள் உள்ளன.

டிஸ்பிளே
இந்த மேக்புக் ப்ரோ ஆனது 3456×2234 ரெசல்யூஷன் கொண்ட 16.2 இன்ச் (41.05 செ.மீ) அளவுள்ள லிக்விட் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளே உள்ளது. அதோடு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 முதல் 1,600 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. இதே போல 14.2 இன்ச் (35.97 செ.மீ) அளவிலான டிஸ்பிளே கொண்ட மாடலும் உள்ளது. இந்த டிஸ்பிளே 1 பில்லியன் நிறங்களை ஒன்றிணைத்துக் காட்டக்கூடியது.

பிராசஸர்
புதிய மேக்புக் ப்ரோ சீரிஸ் ஆனது 3 என்எம் (3nm) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய எம்3 சிப் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்புகளில் அதிக டிரான்சிஸ்டர்கள் சிறிய இடத்தில் நிரம்பியுள்ளன. இதனால் மேக்புக் வேகம் மற்றும் செயல்திறன் ஆனது அதிகமாக இருக்கும். இது எம்1 சிப்புடன் ஒப்பிடும்போது 50 சதவீதம் மேம்படுத்தப்பட்ட செயல்திறன் கோர்களை (Performance core) கொண்டுள்ளது. இதில் மேக் ஓஎஸ் ஆனது உள்ளது.

கேமரா மற்றும் பேட்டரி
இதில் 1080 பிக்சல் பேஸ்டைம் எச்டி கேமரா உள்ளது. அதோடு சுமார் 22 மணிநேரம் வரை பயன்பாடு இருக்கக்கூடிய 100 வாட் ஹவர் லித்தியம் பாலிமர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை சார்ஜ் செய்ய டைப்-சி சார்ஜிங் போர்ட்டுடன் கூடிய 140 வாட்ஸ் பவர் அடாப்டர் கொடுக்கபட்டுள்ளது. இது வேகமாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. அதோடு, எச்டிஎம்ஐ போர்ட், 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக், பேக்லிட் மேஜிக் கீபோர்ட், வைஃபை 6இ, புளூடூத் 5.3 ஆகியவை உள்ளன.

ஸ்டோரேஜ் மற்றும் விலை
இந்த மேக்புக் ப்ரோவில் மொத்தமாக நான்கு வகை ரேம் + இரண்டு வகை ஸ்டோரேஜ், இரண்டு டிஸ்பிளே மற்றும் மூன்று வகை சிப்புடன் கூடிய ஒன்பது வேரியண்ட்கள் உள்ளன.

Exit mobile version