Tamil News

பிரதீப் ரங்கநாதன் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் லுக் வெளியாகி பட்டையை கிளப்புகின்றது

நயன்தாரா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் உருவாகி வருகிறது.

பிரதீப் ரங்கநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் எல்லாம் வெளியாகி தெறிக்கவிட்டது.

இந்நிலையில், எஸ்.ஜே. சூர்யாவின் லுக் போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்களை ஹேப்பியாக்கி உள்ளது.

ஹீரோவாக எஸ்.ஜே. சூர்யா நடித்த படங்கள் சரியாக போகாத நிலையில், வில்லனாகவும் குணசித்ர நடிகராகவும் மாறி தற்போது ஸ்கோர் செய்து வருகிறார்.

ஓ மை கடவுளே படத்தில் விஜய் சேதுபதி கடவுளாக நடித்ததை போல எஸ்.ஜே. சூர்யா இந்த படத்தில் காதல் இன்சூரன்ஸ் கம்பெனி நடத்தும் கடவுளாக நடித்துள்ளாரா? என்கிற கேள்வி தான் அவருடைய ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்தால் எழுகிறது.

இன்னொரு புறம் அந்த மோதிரத்தில் இதயம் செய்வதை எந்திரம் செய்யாது என்கிற வாசகம் இடம்பெற்றுள்ள நிலையில், ஹீரோவாக இருக்கும் பிரதீப் ரங்கநாதனே ரோபோட்டாக இருப்பாரோ என்கிற கேள்வியையும் எழுப்புகிறது.

Exit mobile version