Tamil News

Breaking: பிரபல நடிகர் லொள்ளு சபா சேசு காலமானார்

விஜய் டிவியில் ஓளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான, நடிகர் சேசு, மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான சேசு, நடிகர் தனுஷ் ஹீரோவாக அறிமுகமான ‘துள்ளுவதோ இளமை’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்தார்.

இதை தொடர்ந்து பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவர், சமீப காலமாக தொடர்ந்து சந்தானத்தின் படங்களில், தன்னுடைய காமெடி மூலம் பல ரசிகர்களை சிரிக்க வைத்தார்.

சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான ‘வடக்குபட்டி ராமசாமி’ படத்தில் சேசு நடித்த கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது.

இந்நிலையில், கடந்த மார்ச் 15-ஆம் தேதி உடல்நல குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சேசு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவு திரையுலகை சேர்ந்த பலரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Exit mobile version