Site icon Tamil News

உள்ளுராட்சி தேர்தல் : வேட்புமனுக்களை இரத்து செய்ய யோசனை!

2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் யோசனை தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் சில வாரங்களுக்குள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடி இவ்விடயத்தை முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலுக்கான முன்மொழிவுகள் உள்ளுராட்சி அமைச்சின் ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, உள்ளாட்சித் தேர்தல் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுவதால், வேட்புமனு தாக்கல் செய்த அரசு ஊழியர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளதால், உரிய வேட்புமனுக்களை ரத்து செய்யுமாறு பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எவ்வாறாயினும், இதற்காக பாராளுமன்றத்தில் விசேட பிரேரணையொன்று நிறைவேற்றப்பட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் வக்கும்புர மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version