Site icon Tamil News

லிபியா வெள்ளம்!!! பலி எண்ணிக்கை 20 ஆயிரமாக உயரும் அபாயம்

லிபியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கினால் லிபியாவின் டெர்னா நகரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000 ஆக உயரக்கூடும் என்று மேயர் கூறுகிறார்.

டெர்னா நகரம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. நகரில் வசித்த சுமார் 10,000 பேர் கடலில் அடித்துச் செல்லப்பட்டதாக முன்னர் செய்திகள் வந்தன.

வெள்ளம் காரணமாக நகரில் உள்ள 02 தடுப்பணைகள் உடைந்து பல வீடுகள், கட்டிடங்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இருப்பினும், லிபியாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,300 என்று முன்னதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் தற்போதைய நிலவரப்படி இறந்தவர்களின் எண்ணிக்கை கணத்துக்கு நிமிடம் திருத்தப்பட்டு வருகிறது.

இறந்தவர்களில் சூடான் மற்றும் எகிப்திய பிரஜைகளும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டெர்னாவின் பல பகுதிகளில் வீடுகள் அல்லது கட்டிடங்கள் இருந்ததா என்பதைக் கண்டறிவது கூட கடினமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன தமது உறவினர்களை தேடி உயிர் பிழைத்தவர்கள் அப்பகுதிக்கு வந்து கதறி அழுததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மண் அடுக்குகள் மற்றும் சேதமடைந்த வீடுகள் மற்றும் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் கடினமாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version