Site icon Tamil News

மேற்கத்திய ஆயுதங்களின் சேமிப்புக் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்துவோம் – ரஷ்யா சூளுறை!

உக்ரைனில் உள்ள தளவாட மையங்கள் மற்றும் மேற்கத்திய ஆயுதங்களின் சேமிப்புக் கிடங்குகள் மீதான தாக்குதல்களின் தீவிரத்தை துருப்புக்கள் அதிகரிக்கும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

அண்மையில் அமெரிக்கா, உக்ரைனுக்கான உதவி தொகுப்பை அறிவித்தது. இந்நிலையில் இதற்கு எதிர்வினையாற்றும் வகையில், ஆயுதங்களின் உற்பத்தியை அதிகரிப்போம் என்றும், தாக்குதல்களை தீவிரப்படுத்துவோம் என்றும் ரஷ்யா சூளுறைத்துள்ளது.

அமெரிக்காவின் புதிய உதவி தொகுப்பில் வெடிமருந்து பொருட்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான இடைமறிப்புகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version