Tamil News

லியோ ஆடியோ லாஞ்ச் ரத்து.. .. தயாரிப்பாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

நடிகர் தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் தான் அடுத்து வரக்கூடிய தமிழ் படங்களில் அனைவரும் எதிர்பார்க்கும் படமாகும்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கம், அனிருத் இசை, திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் என பெரும் பட்டாளமே எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.

அடுத்த மாதம் 19ம் தேதி இந்தத்திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், புரமோஷன் வேலைகள் பரபரக்க தொடங்கி இருக்கின்றன. முன்னதாக படத்தின் போஸ்டர்கள் வெளியாகி சமூகவலைதளங்களில் வரவேற்பை பெற்றன.

விஜய் படங்களின் ஆகப்பெரும் புரமோஷனாக அவர் படங்களின் இசை வெளியீட்டு விழாவும், அதில் அவர் பேசும் குட்டிக்கதையும் அமையும். ஆகையால், அவரது ரசிகர்கள் அதனை மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், லியோ தயாரிப்பாளர்களான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ, வெளியிட்டுள்ள பதிவு விஜய் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், நிரம்பி வழியும் பாஸ் கோரிக்கைகள் மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, லியோ ஆடியோ வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல” என்று தெரிவித்துள்ளனர்.

லியோ தயாரிப்பாளரின் இந்த பதிவால் தளபதி விஜய் ரசிகர்கள் கடும் கோபத்திற்கு தள்ளப்பட்டன. பலரும் சமூக வலைத்தளங்களில் ஏன் இசை வெளியீட்டு விழா தள்ளி வைக்கப்பட்டது? அரசியல் காரணங்கள் இருக்கிறதா? என பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Exit mobile version