Site icon Tamil News

‘லால் சலாம்’ படத்தின் தேர் திருவிழா பாடல் வெளியானது…

லைக்கா நிறுவனம் தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தேர் திருவிழா’ பாடல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலுக்கு, விவேக் லிரிக்கல் வரிகள் எழுதி உள்ளார். சங்கர் மகாதேவன், ஏ ஆர் ரைஹானா, யோகி சங்கர் ஆகியோர் இந்த பாடலை பாடியுள்ளனர்.

பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ள தேர் திருவிழா பாடல், ஒரு கிராமத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவை கண்முன் நிறுத்தும் விதத்தில் தாத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version