Site icon Tamil News

பிரித்தானியாவில் தொழிற்கட்சிக்கு கடுமையான போட்டி கொடுக்க முடியும் – பிரதமர் நம்பிக்கை

பிரித்தானியாவில் தம்முடைய கன்சர்வேட்டிவ் கட்சி, தொழிற்கட்சி தலைமையிலான அரசாங்கத்துக்குக் கடுமையான போட்டி கொடுக்க முடியும் என பிரதமர் ரிஷி சுனக் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாளைய தினம் பிரித்தானியாவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி அதில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்று கணிக்கப்படும் சூழலில் சுனக் அவ்வாறு கூறினார்.

வலசாரி சீர்திருத்தக் கட்சிக்கு மக்கள் வாக்களிப்பது கன்சர்வேட்டிவ் கட்சி வலுவான எதிர்க்கட்சியாகும் வாய்ப்பைக் குலைக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கன்சர்வேட்டிவ் கட்சி சில தவறுகள் செய்திருப்பதாகவும், தம் அரசாங்கத்தின் மீது மக்கள் விரக்தியடைந்திருப்பதாகவும் சுனக் ஒப்புக்கொண்டார்.

தேர்தலில் தொழிற்கட்சி 20 புள்ளிகள் முன்னிலையில் இருப்பதாகக் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

கடந்த 14 ஆண்டுகளாக சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி பிரித்தானியாவை ஆள்கிறது. அதன் ஆட்சிக் காலத்தில் பொருளியல் மந்தநிலை, பொதுச் சேவைகளில் சுணக்கம், ஊழல் முதலியன நீடிப்பதாகக் குறைகூறப்படுகிறது.

Exit mobile version