Tamil News

2 தேசிய விருதுகளை தட்டித் தூக்கியது KGF

சிறந்த கன்னட மொழி திரைப்படம் மற்றும் சிறந்த ஆக்ஷன் இயக்கத்திற்கான இரண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளது KGF திரைப்படம்.

ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழிகளில் வெளியாகும், சிறந்த திரைப்படங்கள், நடிகர், நடிகைகள், குழந்தை நட்சத்திரம் என பல்வேறு பட்டியல்களின் கீழ் சிறந்த படைப்புகளுக்கும், கலைஞர்களுக்கும் தேசிய விருது வழங்கி கௌரவித்து அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறது மத்திய அரசு.

அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான, 70 ஆம் ஆண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் அதிக பட்சமாக 4 விருதுகளை பெற்ற நிலையில், தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் 2 விருதுகளை வென்றது.

மற்ற மொழிகளில் வெளியான சிறந்த படைப்புகளுக்கும் தேசிய விருது கிடைத்தது. அந்த வகையில் கன்னட மொழியில் வெளியாகி, இந்திய அளவில் கவனிக்காட்ட திரைப்படமாக இருந்த, KGF 2 திரைப்படம், இரண்டு தேசிய விருதுகளை தட்டி தூக்கி உள்ளது.

அதன்படி சிறந்த கன்னட படத்திற்கான விருதை KGF பெற்றுள்ளது. இதை தொடர்ந்து, சிறந்த அச்டின் இயக்கத்திற்கான விருதை, ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவு பெற்றுள்ளார்.

யாஷ் அதிரடி ஆக்ஷன் நாயகனாக நடித்திருந்த இந்த படம், ஆயிரம் கோடி வசூல் கிளப்பில் இணைந்தது. இந்த படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடிக்க, யாஷுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். மேலும் ரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர் என்பது குறிபிடித்தக்கது.

Exit mobile version