Site icon Tamil News

உலகக்கோப்பை தொடரில் இருந்து முக்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் விலகல்

டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இத்தொடருக்காக தற்போது ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் தங்களது அணிகளை அறிவித்துள்ளன.

அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரை நடத்தும் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியும் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக ரோவ்மன் பவல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியிலிருந்து நட்சத்திர ஆல் ராவுண்டர் ஜேசன் ஹோல்டர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக உலகக்கோப்பை தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஒபேத் மெக்காய் சேர்க்கப்பட்டுள்ளார்.

நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்க தொடரிலும் மெக்காய் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version