Tamil News

சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – “கங்குவா” சுடச்சுட அப்டேட்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட படமான கங்குவா திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் குறித்த அப்டேட்டை கங்குவா படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் இந்த ஆண்டு தங்கலான் மற்றும் கங்குவா என விக்ரம் மற்றும் சூர்யா நடிப்பில் பிரம்மாண்ட படங்கள் உருவாகி வருகின்றன.

வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது.

அடுத்ததாக கங்குவா படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழாவை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கிறது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, அனிமல் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கங்குவா திரைப்படத்தின் டிரெய்லர் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Exit mobile version