Tamil News

கமலின் ‘தக் லைஃப்’; துல்கர் சல்மானை அடுத்து விலகிய ஜெயம் ரவி!

நடிகர் கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்னால் நடிகர் துல்கர் சல்மான் விலகினார். இப்போது நடிகர் ஜெயம் ரவியும் விலகியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

‘இந்தியன்2’, ‘கல்கி ஏடி 2898’ என நடிகர் கமல்ஹாசனின் அடுத்தடுத்தப் படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ‘தக் லைஃப்’ படமும் ஒன்று. நாயகன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் மணி ரத்னம்-கமல்ஹாசன் இணைந்துள்ள படம் ‘தக் லைஃப்’. பல வருடங்களுக்குப் பிறகு இந்தக் கூட்டணி இணைந்துள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Kamal Haasan-Mani Ratnam's Thug Life star cast - after Trisha and Dulquer  Salmaan, Jayam Ravi roped in

அந்த வகையில், இந்தப் படத்தில் நடிகர்கள் ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான் எனப் பலரும் நடிக்கின்றனர் என்ற அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது. இப்படியான சூழ்நிலையில்தான் திகதி பிரச்சினை காரணமாக இந்தப் படத்தில் இருந்து நடிகர் துல்கர் சல்மான் அதிரடியாக விலகினார்.

இவரைத் தொடர்ந்து இப்போது நடிகர் ஜெயம் ரவியும் இப்படத்திலிருந்து விலகியுள்ளார் என்ற செய்தி ரசிகர்களை மேலும் அதிர்ச்சியாக்கியுள்ளது. துல்கர் சல்மானைப் போலவே ஜெயம் ரவிக்கும் திகதிகள் பிரச்சினைதான் காரணமாக சொல்லப்படுகிறது. ‘காதலிக்க நேரமில்லை’, ‘பிரதர்’, ‘ஜனகனமண’ என ஜெயம் ரவியின் கைவசம் அடுத்தடுத்தப் படங்கள் உள்ளதால் திகதி பிரச்சினை எழுந்ததுள்ளதாக சொல்லப்படுகிறது.

கமலுடன் இணைந்து ஜெயம் ரவி நடிப்பதைப் பார்க்கலாம் என ஆவலுடன் இருந்த ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. துல்கருக்குப் பதிலாக, ‘தக் லைஃப்’ படத்தில் யார் நடிப்பார் என்ற ஆர்வமும் எழுந்துள்ளது.

Exit mobile version