Tamil News

இன்னும் 2 நாளில் நல்ல செய்தியோடு சந்திக்கிறேன்… கமல் கொடுத்த அப்டேட்

சுமார் 36 ஆண்டுகளுக்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள், பிரபல இயக்குனர் மணிரத்னம் அவர்களுடன் இணைந்து பணியாற்றிவரும் படம் தான் Thug Life.

இந்த திரைப்படம் தற்கால கதை களத்தை கொண்ட படமாகத் தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்றும், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் வாழ்ந்து வந்த Thuggees என்பவர்களுடைய வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த சூழலில் அந்த திரைப்படத்திற்கான சில பணிகளை அமெரிக்காவில் முடித்துவிட்டு தற்பொழுது சென்னை திரும்பி இருக்கிறார் உலகநாயகன் கமல்ஹாசன். இன்னும் இரண்டு தினங்களில் நல்ல செய்தியோடு செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

தக் லைப் படத்தின் அடுத்த கட்ட படபிடிப்பு சைபீரியாவில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் மற்றும் திரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.

சென்னை ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்த கமல், இன்னும் 2 நாள்களில் அவர்களை நல்ல செய்தியோடு சந்திப்பதாக கூறியுள்ளார். அது நிச்சயம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Exit mobile version