Tamil News

Thug Life ஷூட்டிங் ஸ்பாட்டில் திரிஷாவும் கமலும் என்ன செய்றாங்கனு பாருங்க…

தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் படப்பிடிப்பை நடத்திய படக்குழு அடுத்ததாக கேரளாவில் அப்படத்தின் ஷூட்டிங்கை நடத்தி வருகின்றனர்.

இதில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் திரிஷா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திரிஷா.

அதன்படி கமல்ஹாசனின் ஆடை வடிவமைப்பாளரான அம்ரிதா ராம் எடுத்த செல்பி புகைப்படத்தில் கமல்ஹாசனை கட்டியணைத்தபடி போஸ் கொடுத்து இருக்கிறார் திரிஷா.

மேலும் உங்கள் மனதுக்கு பிடித்தவர்களுடன் இருங்கள், அவர்கள் எப்போதும் உங்களுக்காக இருப்பார்கள் மற்றும் உங்களைத் தொடர்ந்து ஊக்குவிப்பார்கள் என்று திரிஷா அந்த பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். அவரின் செல்பி புகைப்படம் தற்போது செம்ம வைரலாகி வருகிறது.

Exit mobile version