Tamil News

கல்முனை சிறுவன் மரணம் – நன்னடத்தை மேற்பார்வையாளருக்கு விளக்கமறியல்

கல்முனை சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த பெண்னை இன்று கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அது தொடர்பான வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறும் கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண் சந்தேகத்தில் கல்முனை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் மீண்டும் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் மரணமடைந்த சிறுவனின் தந்தை ஆஜராகி இருந்ததுடன் பொலிஸார் மற்றும் பிரதிவாதியின் சட்டத்தரணிகளின் விண்ணப்பங்கள் ஆராயப்பட்டு 28 வயதுடைய குறித்த பாடசாலையின் மேற்பார்வையாளரான பிறின்ஸி புலேந்திரன் என்பவரை விளக்கமறியலில் உத்தரவிட்டார்.

கடந்த மாதம் 17ஆம் திகதி ஆயலம் ஒன்றில் களவு செய்ததாக குற்றச்சாட்டின் பெயரில் மட்டக்களப்பு,கொக்குவில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட குறித்த சிறுவன், நீதிமன்ற வழக்கு விசாரணையின் பின்னர் நீதிவானின் உத்தரவின் பிரகாரம் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில்; பாதுகாப்பிற்காக தங்க வைக்கப்பட்டிருந்தார்.

குறித்த சிறுவன் புதன்கிழமை (29.112023)அதிகாலை 3.30 மணி அளவில் உயிரிழந்திருந்த நிலையில் குறித்த சிறுவன் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளமை உடற் கூற்று பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுவர் காப்பக பெண் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version