Tamil News

மக்களே கல்கி படத்தின் ட்ரெய்லர் பார்க்க ரெடியா?? அப்போ இத முதல்ல பாருங்க…

பாகுபலி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் அமைத்துக் கொண்டவர் நடிகர் பிரபாஸ். இவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்த சலார் திரைப்படம் ஓவர் பில்டப் என விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்ட பின்னரும் கூட, இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஆவல் உள்ளது.

இந்நிலையில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் “கல்கி 2898 ஏ.டி”.

இப்படம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிற மற்றொரு காரணம் படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கின்றார் என்பது கூடுதல் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

கல்கி 2898 ஏடி படத்தில் பிரபாஸூடன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், உலக நாயகன் கமல் ஹாசன், அதிரடிக்கு பெயர்போன நடிகை தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகின்றார்.

சில தினங்களுக்கு முன்னர் அமிதாப் பச்சனின் மிரட்டலான புகைப்படத்தை வெளியிட்ட படக்குழுவுக்கு இந்தியா முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வந்தது. இந்நிலையில் இன்று அதாவது, ஜூன் 9ஆம் தேதி தீபிகா படுகோனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

அந்த போஸ்டரில் தீபிகா படுகோன் போர் வீராங்கனையைப் போலவும் ஏதோ ஒரு பெரும் ஏக்கத்தில் இருந்து வெளிவந்ததைப் போன்ற முக பாவத்துடனும் காணப்படுகின்றார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

குறிப்பாக தீபிகா படுகோனின் ரசிகர்கள் இந்த போஸ்டரைக் கொண்டு இணையத்தை அலறவிட்டுக்கொண்டு உள்ளனர்.

நாளை ட்ரைலர் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு தீபிகாவின் போஸ்டரை வெளியிட்டு எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. வழக்கமாக ஒரு படத்தின் கதாநாயகி என்றால் கதைக்கு முக்கியத்துவம் இல்லாத கதாப்பாத்திரமாகத்தான் இருக்கும். ஆனால் இந்த போஸ்டரைப் பார்க்கையில் தீபிகா படுகோனுக்கு மிகவும் முக்கியமான கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது தெளிவாகின்றது.

Exit mobile version