Tamil News

500 கோடிகளை கடந்து வசூல் மழையில் சாதிக்கும் கல்கி

பான் இந்தியா ஹீரோவான பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் கல்கி 2898AD. இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி உள்ளார். இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, பசுபதி, திஷா பதானி, விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இப்படத்தை வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.

கல்கி ரிலீஸ் ஆன முதல் நாளே பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பிய இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.191 கோடி வசூலை வாரிக்குவித்தது.

தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வரும் கல்கி 2898AD திரைப்படத்தின் நான்கு நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

அதன்படி கல்கி 2898AD திரைப்படம் நான்கு நாட்களில் உலகளவில் ரூ.500 கோடியைத்தாண்டி 555 கோடியை வசூலித்து மாஸ் காட்டி உள்ளது.

இப்படம் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அதனை இன்னும் ஒரு சில தினங்களில் கல்கி 2898AD திரைப்படம் எடுத்துவிடும் என கூறப்படுகிறது.

 

Exit mobile version