Tamil News

வசூல் வேட்டை நடத்தும் Kalki 2898 AD – படக்குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு

இந்தியாவின் பெரும்பான்மையான திரையரங்குகளில் தற்போது திரையிடப்பட்டு வரும் படம் கல்கி 2898 ஏ.டி. பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.

படத்தினை இந்தியாவின் மிகவும் தொன்மையான படத்தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவீஸ் தயாரித்துள்ளது. இந்த படம் கடந்த 27ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில் படத்தின் மூன்றாவது நாள் வசூல் குறித்து ப்டக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன் அடிபடையில் படம் வெளியான முதல் மூன்று நாட்களில் மட்டும் ரூபாய் 415 கோடிகளை உலகம் முழுவதும் வசூல் செய்துள்ளது.

இதில் முதல் நாளில் 191.5 கோடிகளும், இரண்டு நாட்களில் 298.5 கோடிகளும் மூன்று நாட்களில் ரூபாய் 415 கோடிகளும் வசூல் செய்துள்ளது.

இதன் அடிப்படையில் முதல் நாளில் 191.5 கோடிகளும், இரண்டாவது நாளில் ரூபாய் 107 கோடிகளும் வசூல் செய்துள்ளது. அதேபோல் மூன்றாவது நாளில் 116.5 கோடிகளை வசூல் செய்துள்ளது.

படம் வெளியாகி முதல் மூன்று நாட்களில் 415 கோடிகளை படம் வசூல் செய்து அசத்தலான வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றது.

படம் வார இறுதி நாளான இன்றும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து 500 கோடிகளைக் கடக்கும் என படக்குழு எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளது.

Exit mobile version