Tamil News

பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் கல்கி – முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் பிரபாஸுக்கு கம்பேக் விருந்தாக வந்துள்ள திரைப்படம் தான் கல்கி 2898AD. பேண்டஸி திரைப்படமான இதை நாக் அஸ்வின் இயக்கி உள்ளார்.

இப்படத்தை வைஜெயந்தி மூவீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சுமார் 600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தில் பிரபாஸுடன் தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகி உள்ள கல்கி 2898AD, நேற்று தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் உலகமெங்கும் ரிலீஸ் ஆனது.

படத்தின் முதல் பாதி மெதுவாக செல்வதாக விமர்சனம் வந்தாலும், இரண்டாம் பாதியில் படம் பட்டாசாக இருப்பதாக விமர்சகர்கள் தெரிவித்தனர். பாசிடிவ் ரிவ்யூ காரணமாக கல்கி 2898AD திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பி இருக்கிறது.

இப்படி முதல் நாளிலேயே உலகளவில் ரூ.191.5 கோடி வசூலை வாரிக்குவித்து உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.

அதிலும் இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.95 கோடி வசூலை அள்ளி இருக்கிறதாம்.

இதன்மூலம் முதல்நாளில் அதிக வசூல் அள்ளிய இந்திய திரைப்பட பட்டியலில் 3வது இடம் பிடித்துள்ளது கல்கி திரைப்படம். இதற்கு முன்னர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் நடித்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ரூ.223 கோடி வசூலித்ததே சாதனையாக உள்ளது.

அடுத்ததாக ரூ.217 கோடி வசூலுடன் பாகுபலி 2 திரைப்படம் இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு வெளிவந்த பிரபாஸின் சலார் முதல் நாளில் ரூ.158 கோடியும், விஜய்யின் லியோ ரூ.142.75 கோடியும் வசூலித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version