Tamil News

பீஸ்ட் தோல்விக்கு யார் காரணம்?? உண்மையை உடைத்த கலாநிதி மாறன்

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீசான இப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். அனிரூத் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் இப்படத்தில் ஹிட்டான நிலையில், ஹலமதி ஹபீபு பாடல் உலகமெங்கும் வைரலானது.

பீஸ்ட் படம் பல நெகடிவ் விமர்சனங்களை பெற்று பெருந்தோல்வியை அடைந்தது. இதனை தொடர்ந்து இயக்குனர் நெல்சனின் கேரியரும் கேள்விக்குறியான நிலையில், ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை கொடுத்தார். மேலும் இத்திரைப்படத்தின் வெற்றி நெல்சனின் கேரியரை உச்சாணிக்கு ஏற்றியுள்ளது.

இதனிடையே, அண்மையில் ரஜினிக்கு ஜெயிலர் படத்தில் கொடுத்த வெற்றியை ஏன் விஜய்க்கு பீஸ்ட் படத்தில் கொடுக்கவில்லை என நெல்சனிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,

பீஸ்ட் படத்தை எடுக்கும்போது இத்தனை நாட்களுக்குள் எடுத்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் தான் இருந்ததாகவும், ஆறு, ஏழு மாதங்கள் நேரம் கொடுத்திருந்தால் கண்டிப்பாக பீஸ்ட் படத்தை சற்று தரம் உயர்த்தி வெளியிட்டிருப்பேன் என நெல்சன் பதிலளித்தார்.

ஆனால் அப்போது பேசிய அவர்,

இப்படத்திற்கு உண்மையான காரணம் யார் என்று அவர்களது பெயரை கூறியிருக்கமாட்டார். இதனிடையே பீஸ்ட், ஜெயிலர் உள்ளிட்ட இரண்டு படங்களையும் தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனரான கலாநிதிமாறன், பீஸ்ட் படத்தின் தோல்விக்கான காரணம் யார் என கூறியுள்ளார்.

முதலில் பேசிய அவர், ஏப்ரல் 14ஆம் தேதி இந்த படம் வர வேண்டும் என்று நெல்சனுக்கு நாங்கள் தான் நெருக்கடி கொடுத்தோம்.

நெல்சனும் சரி என்று வேக வேகமாக படத்தை முடித்தார். அப்பொழுது கேஜிஎப் படமும் வெளிவந்த சமயம், பீஸ்ட் படத்தை வெளியிட வேண்டாம் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் நாங்கள் அதை கேட்காமல், இப்படத்தை வெளியிட்டே ஆக வேண்டும் என்ற நெருக்கடியை நெல்சனுக்கு கொடுத்ததால் தான் படம் தோல்வியடைந்தது என கலாநிதிமாறன் வெளிப்படையாக பேசியிருந்தார்.

மேலும் பேசிய அவர் பீஸ்ட் படத்தின் தோல்விக்கு நாங்கள் தான் காரணம் என கூறி, நடிகர் விஜய்க்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை எனவும் கலாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version