Site icon Tamil News

தவறான சிகிச்சையினால் கை அகற்றப்பட்ட சிறுமிக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும்! அருண் சித்தார்த்

கை அகற்றப்பட்ட சிறுமிக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள அருண் சித்தார்த் அரச வைத்தியசாலைகள்தான் ஏழைகளுக்கு இருக்கின்ற ஒரே புகலிடம் எனவும் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே யாழ் சிவில் சமூக நிலையத்தின் தலைவர் அருண் சித்தார்த் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சில தினங்களுக்கு முன்பு யாழ். போதனா வைத்தியசாலையில் தவறான சிகிச்சையினால் தனது கரத்தை இழந்த சிறுமியான வைஷாலி தொடர்பான செய்திகள் சர்ச்சைகள் சமூகத்தில் மேலெழுந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து சமூக கரிசனை உள்ள ஒரு குழுவாக நாம் ஆராய்ந்து பார்க்கின்ற போது இதற்கு பின்னணியில் என்ன இருக்கின்றது என்பது குறித்து யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

முக்கியமாக இந்த சிறுமி இரண்டு தனியார் வைத்தியசாலைகளுக்கு முதலில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார் அதற்குப் பின்பு தான் இவர் யாழ் போதனை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு இருக்கின்றார்,

முக்கியமாக அந்த இரண்டு வைத்தியசாலைகளில் ஒரு வைத்தியசாலை குறித்து பல காலமாகவே குற்றச்சாட்டுகள் இருக்கின்றது. தவறான வைத்தியங்கள், தவறான செயற்பாடுகள் காரணமாக அவர்களுக்கு நீதிமன்ற வழக்குகள் கூட இருப்பதாக அறிகின்றோம். அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சிறுமியின் பெற்றோருடைய துயரம் குறித்து நாங்கள் முதலில் சிந்திக்க வேண்டும்.

அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அத்தோடு இதற்குப் பின்புலத்தில் யாழ் போதனை வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தொடர்பான சர்ச்சுகள் உருவாகி இருக்கின்றது, ஆனால் எமக்கு கிடைத்த தகவல்கள் ஊடாக பார்க்கின்ற போது இந்த சம்பவத்தை வைத்து மருத்துவம் முழுமையாக வியாபாரம் ஆக்கப்படுகின்ற ஒரு சதி அல்லது ஒரு வலைப்பின்னல் ஒன்று உருவாகும் சூழலொன்றை நாங்கள் காண்கின்றோம்.

சாதாரண ஏழை எளிய மக்கள் சிறப்பான வைத்தியம் பெறக்கூடிய வைத்தியசாலைகள் மீது பாரிய ஒரு சந்தேகத்தை மக்கள் மத்தியில் பரப்பி அதனூடாக இந்த மக்களை தனியார் வைத்தியசாலைக்கு காசு செலவழித்து போகவைக்கின்ற ஒரு செயற்பாடு இதன் பின்னணியில் இருப்பதாகவும் பேசப்படுகிறது.

இந்திய வைத்தியசாலைகள் இங்கு கால் பதிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன, அதாவது பல லட்சங்கள் கட்டி மருந்துகளை எடுக்க வேண்டிய ஒரு சூழல் இதற்க்கு பின்னால் இருக்கின்றது,

ஒரு மருத்துவம் மாஃபியா ஒன்று இயங்குவதாக தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றது. நாங்கள் இது குறித்து மேலதிக தகவல்களை பெற்றுக் கொண்டு, இந்த விடயம் தற்போது நீதிமன்றத்திற்கு போய் இருக்கின்றது கடைசியாக இது எங்களுடைய சிறுமிக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் அத்தோடு அரச வைத்தியசாலைகள் தான் எமக்கு இருக்கின்ற ஒரே புகலிடம்.

இந்த அரச வைத்தியசாலைகளின் தரம், அதனுடைய சிறந்த செயற்பாடுகள் இவை அனைத்தும் பழையபடி இருக்க வேண்டும். நிறைய குத்துச்சாட்டுகள் இருக்கின்றது சேவைகள் தொடர்பாக ஆனால் குற்றச்சாட்டுக்கள் ஊடாக மக்களை தனியார் வைத்தியசாலைகளுக்கு நோக்கி தள்ளும் ஒரு வியாபார சூழ்ச்சியா இது என்றும் சிந்திக்க இருக்கின்றது என தெரிவித்துள்ளார்.

Exit mobile version